பக்கங்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

சூரிய கிரகணம்


       சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில்(conjunction) இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். முதலாவது முழு சூரிய கிரகணம் என்றும் பின்னர் கூறப்பட்டது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் , சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்...


நிலவின் கலைகள்

            பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் பல்வேறு கட்டங்களை புவியிலுள்ளோருக்கு அளிக்கிறது.

1.புது நிலவு (அமாவாசை)


2.புது பிறை (நான்காம் நாள்)

3.முதல் கால்பிறை (ஏழாம் நாள்)

4.வளர் முகிழ்மதி (பத்தாம் நாள்)

5.முழு நிலவு (பதிநான்காம் நாள்)

6.தேய் முகிழ்மதி (பதினெட்டாம் நாள்)

7.இறுதி கால்பிறை (இருபத்தியிரண்டாம் நாள்)

8.பழைய பிறை(இருபத்தியாறாம் நாள்)

9.மீண்டும் புது நிலவு (இருபத்தி ஒன்பதாம் நாள்)

       புது நிலவின் போது நிலவைக் காண இயலாது. ஏனெனில் பூமியை நோக்கியுள்ள நிலவுப்பகுதியின் மீது சூரியவொளி சிறிதும் படுவதில்லை.

ஆயகலைகள் அறுபத்து நான்கு

         ஆய கலைகள் அறுபத்து நாலும் தெரியனும்'னு பெரியவங்க சொல்லக் கேட்டு இருப்பீங்க. அந்த அறுபத்து நாலு என்னங்றது தான் இந்தப் பதிவு...




1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடனம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

நூறு குடம் தண்ணீர்

தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால் தான் பழம் பழுக்கும். தெரியாத கடவுளை விட தெரிந்த பேயே மேல்.
இளைஞர்கள் தொடு வானம் போன்ற ஓர் லட்சியத்தை ஏற்படுத்தி கொண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும். நம்புங்கள், அப்படியே ஆவீர்கள். விடா முயற்சியே வெற்றியை பெற்றுத்தரும் ஆயுதம்.
மரத்தை கண்டு பலத்தை விடாதே!

வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்

நன்மை தரும் 7 விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் 7 விடயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்க்கதயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க 7 விடயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
7 வழிகைளையும் கடைப்பிடிக்க 7 மா !